Home /News /chennai /

வைத்தியலிங்கத்தை அமமுகவிற்கு சாக்லேட் கொடுத்து அழைக்கிறார் சசிகலா - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

வைத்தியலிங்கத்தை அமமுகவிற்கு சாக்லேட் கொடுத்து அழைக்கிறார் சசிகலா - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

“என்னுடைய நண்பர் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை. எனவே அமமுகவில் சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள் என்றார்.”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் ஓ.பி.எஸ்-ஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

    கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் கலவரம் நடைபெற்றதை அடுத்து, அதிமுக அலுவலம் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர்.

    இதனையடுத்து ஓ.பி.எஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தில் நுழைய பாதுகாப்பு கோரியிருந்தனர். அதற்கு காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே பாதுகாப்பு வழங்க முடியும் என தெரிவித்தது.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்-ஐ கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

    இதையும் வாசிக்க: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் விசிட்! ஸ்வீட் கொடுத்த சசிகலா!!

    இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வைத்தியலிங்கம் - சசிகலா சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய நண்பர் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த வேலையும் இல்லை. எனவே அமமுகவில் சாக்லேட் கொடுத்து கூப்பிடுகிறார்கள் என்றார்.”

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். கட்சியின் அடிப்படை பதவியில் கூட இல்லாத ஒருவர் எப்படி அதிமுக அலுவலகத்திற்குள் நுழைய முடியும் என கேள்வி எழுப்பினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Jayakumar, OPS - EPS

    அடுத்த செய்தி