ஹோம் /நியூஸ் /சென்னை /

33 திட்டங்களில் 20 செயல்படுத்தலயா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை விளக்கம்!

33 திட்டங்களில் 20 செயல்படுத்தலயா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை விளக்கம்!

அண்ணாமலை

அண்ணாமலை

அனைத்து திட்டங்களும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன - ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட 33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செய்ல்பாட்டில் இல்லை என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த 33 திட்டங்களுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கோரப்பட்ட கேள்விகளில் சில தகவல்கள் வெளியானது.

அதில், 33 திட்டங்களில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1,423 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதும், மீதம் 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய்க்கூட நிதி செலவு ஒதுக்கவில்லை என்பது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2016-2021 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 927 கோடி பயன்படுத்தாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகி இருந்தது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை, "அரசால் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தபடவில்லை என தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளனர்” என கூறினார். மேலும், “சென்ற ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 757 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆதிதிராவிடர் விடுதிக்கு செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையம், “விடுதிகளுக்கு ஆண்டுதோறும் பராமரிப்புச் செலவினமாக ரூ.10 கோடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டு சட்டமன்ற புதிய அறிவிப்புகளின் கீழ் ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 366 விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் சென்னையில் உள்ள 7 கல்லூரி மாணவ / மாணவியர் விடுதிகளிலும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 49 விடுதிகளுக்கு ரூ.85.75 கோடி செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்ட திட்டங்கள் 2021 – 2022 புதிய அறிவிப்புகளாகும். இதில் கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் விடுதிகள் தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாக காரணமாக இத்திட்டங்களை செயல்படுத்த இடர்பாடுகள் ஏற்பட்டதால் இத்திட்டங்கள் அனைத்தும் இந்நிதியாண்டில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தபடாமல் விடுபடவில்லை. மாறாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் கோவிட் தொற்று காரணமாக இடர்பாடுகள் ஏற்பட்ட திட்டங்களுக்கும் நடப்பாண்டில் முழுமையாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், நடப்பாண்டில் புதிய அறிவிப்புகளின் கீழ் 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் புதிய நூலகங்களும், 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இணைய வழி நூலகங்களும் ரூ.70 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெற பெற்றோர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கான உதவித் தொகை மற்றும் முழு நேர முனைவர் படிப்பிற்கான உதவித் தொகை ஆகியவற்றிற்கான வருமான உச்ச வரம்பு 2021-2022 ஆம் ஆண்டு முதல் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தபடாமல் விடுபடவில்லை. மாறாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் கோவிட் தொற்று காரணமாக இடர்பாடுகள் ஏற்பட்ட திட்டங்களுக்கும் நடப்பாண்டில் முழுமையாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், நடப்பாண்டில் புதிய அறிவிப்புகளின் கீழ் 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் புதிய நூலகங்களும், 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இணைய வழி நூலகங்களும் ரூ.70 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெற பெற்றோர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கான உதவித் தொகை மற்றும் முழு நேர முனைவர் படிப்பிற்கான உதவித் தொகை ஆகியவற்றிற்கான வருமான உச்ச வரம்பு 2021-2022 ஆம் ஆண்டு முதல் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது” என பதிலளித்துள்ளது.

First published:

Tags: Annamalai, Tamilnadu, Tamilnadu government