நடிகர் மயில்சாமி கடந்த 18ஆம் தேதி இரவு மகா சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் விடிய விடிய சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காலமானார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது கடைசியாக பங்கேற்ற சிவராத்திரி விழாவின் இரவு காட்சிகள், கடைசியாக டப்பிங் செய்த காட்சிகள் என அனைத்தும் இணையத்தில் உலாவி வருகின்றன.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நடிகர் பிரபு மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார். நடிகர் மயில்சாமியின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரொம்ப கஷ்டப்பட்டு திரைக்கு வந்தவர் மயில்சாமி. இன்றைக்கு அவரை இத்தனை பேர் பார்க்க வந்திருக்கிறார்கள் என்றால் அவர் அவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர் என தெரிவித்தார். மேலும், நான் அவரை எப்போதும் அவன் இவன் என்றே அழைப்பேன், அவருடன் இருந்தால் கலகலவென இருக்கும். அத்தகைய சிறந்த மனிதர். நாம் வாழும்போது வருவது பெரிதல்ல, நாம் இல்லாத போது எத்தனை பேர் வருகிறார்கள் என்பதே முக்கியம். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Prabu, Mayilsamy