ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் சுவரொட்டி.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் சுவரொட்டி.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 15 நாட்களில் மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியில் சாலை மற்றும் தெருக்களின் பெயர் பலகைகள் மீது சுவரொட்டிகளை ஒட்டினால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டிய நபர்களிடமிருந்து கடந்த மாதத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், இந்த மாதம் 15-ம் தேதி வரை ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களில் மாநகராட்சிப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிய 252 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai corporation, Poster