ஹோம் /நியூஸ் /Chennai /

டாஸ்மாக் பாரில் நண்பர்கள் போல பழகி கார் கடத்தல்.. கால் டாக்ஸி ஓட்டுநருக்கு காத்திருந்த ஷாக்

டாஸ்மாக் பாரில் நண்பர்கள் போல பழகி கார் கடத்தல்.. கால் டாக்ஸி ஓட்டுநருக்கு காத்திருந்த ஷாக்

கார் கடத்தல்

கார் கடத்தல்

Kelambakkam : டாஸ்மாக் பாரில் மதுபோதையில் நண்பர்களாக பழகி, கத்தி முனையில் காரை கடத்தி சென்ற சம்பவம் சென்னை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுபோதையில் நண்பர்களாகியவர்கள் கத்தி முனையில் காரை கடத்தி சென்ற சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. கார் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

  சென்னையை அடுத்த கேளம்பாக்கம் - திருப்போரூர் பிரதானை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையையொட்டி உள்ள பாரில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 43-வயதான ரமேஷ்பாபு கடந்த 13ஆம் தேதி மது அருந்திகொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் மது அருந்திகொண்டிருந்த வேளையில் ரமேஷ்பாபுவுடன் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அவர்கள், ஒன்றாக மது அருந்தி முடித்த பிறகு நான்கு பேரும் பாரை விட்டு வெளியே வர ரமேஷ்பாபு கால்டாக்சி கார் ஓட்டுவதை அறிந்த உடனிருந்த மூன்று பேரும், தங்கள் மூவரையும் அவர்கள் கூறிய இடத்தில் விடும்படி கூறியுள்ளனர்.

  அதன்படி நான்கு பேரும் கரில் சென்றுகொண்டிருந்த நிலையில் திடிரென பயணித்த மூவரும் கத்தி முனையில் ரமேஷ்பாபுவை மிரட்டி, உருட்டு கட்டையால் அடித்தும் அவரிடமிருந்து காரை பறித்துக்கொண்டு தப்பி தலைமறைவாகிவிட்டனர். தன்னுடன் ஒன்றாக மது அருந்தியவர்கள் தன்னுடைய காரை கடத்தி சென்றதும் செய்வதறியாமல் நின்ற ரமேஷ்பாபு பின்னர் அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் கடை மற்றும் சாலையில் கார் கடத்தி சென்ற சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைபற்றிய போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியை சேர்ந்த 24-வயதான ராகுல் என்ற இளைஞரை கைது செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ராகுல் கைதான தகவல் அறிந்த கார் கடத்தி சென்ற சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த கணேஷ், நிவேதன் ஆகிய இருவரும் காரை படூர் ரவுண்டனா அருகில் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்னர். கடத்தப்பட்ட கார் சாலை ஓரம் நின்றுகிடப்பதாக தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் காரை கைபற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

  Must Read : ஆன்லைன் ரம்மி-க்கு மீண்டும் ஒரு உயிர் பலி.. பணத்தை இழந்தால் பெயிண்டர் தற்கொலை

  மேலும், தலைமறைவாக இருக்கும் கணேஷ், நிவேதன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - ப.வினோத்கண்ணன், இசிஆர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Car, Chennai, Crime News, Kelambakkam police station, Tasmac