ஹோம் /நியூஸ் /சென்னை /

உலகக்கோப்பையில் பும்ரா விளையாடாதது இந்தியாவுக்கு பேரிழப்பு - ரவி சாஸ்திரி

உலகக்கோப்பையில் பும்ரா விளையாடாதது இந்தியாவுக்கு பேரிழப்பு - ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலககோப்பை தொடரில் விளையாடதது இந்திய அணிக்கு பேரிழப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Porur, India

  சென்னை அருகே  போருர் அடுத்த  கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி திறந்து வைத்தார்.  இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் காசி விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். பின்னர் ரவி சாஸ்திரி அங்கிருந்த வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இந்திய அணியில் தேவை கருதி தற்போது பல மாறுதல்கள் வந்திருக்கிறது,வரும் உலக கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர்  பும்ரா காயம் காரணமாக இடம்பெறாதது அணிக்கு பெரும் இழப்பாகும், வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி  எளிமையாக செமி பைனல் சென்று கோப்பையையும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஊக்கம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  Also Read: சஞ்சு ஆட்டம் வீண்: த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

  இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 6-வது இடத்தில் களம் கானுவார் என்ற அவர் கடந்த காலங்களை விட தற்போது கிரிக்கெட்டில் பீல்டிங்கில் நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளது" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jasprit bumrah, Ravi Shastri, T20 World Cup