ஹோம் /நியூஸ் /சென்னை /

ஐஸ்கிரீம் வாகன முகவர்கள் ஆக விருப்பமா? - ஆவின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

ஐஸ்கிரீம் வாகன முகவர்கள் ஆக விருப்பமா? - ஆவின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

ஆவின்

ஆவின்

Aavin Push Cart Notification : ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கீரீம்களை நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்ய முகவர்களுக்குக்கான அழைப்பை வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வகைகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடமாடும் ஐஸ்கிரீம் வாகனம் (பேட்டரி வண்டி) மூலம் விற்பனை செய்ய முகவர்கள் தேவை என்ற அறிவிப்பை ஆவின் வெளியிட்டுள்ளது.

இதற்கு சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தின் குடியிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். முகவர்களாக தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் காப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

முகவர்களுக்கான நிபந்தனைகள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகையாக செலுத்த வேண்டும். மேலும் மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு குறையாமல் ஐஸ்க்ரீம் எடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்வதற்கான லாப விகிதமானது 10% முதல் 15% வரை வழங்கப்படும். சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தின் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவர்கள் முன் பணம் செலுத்தி(Cash and Carry) பொருள்களை பெற்றுகொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

முகவர்களாக https://aavin.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து மேலும் விற்பனை செய்யப்பட இருக்கும் பகுதிகள்/இடங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://aavin.tn.gov.in/documents/

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:

பொது மேலாளர்(விற்பனை)

ஆவின் இல்லம்

3A,பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை,

நந்தனம், சென்னை - 600 035.

Also Read : அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்தி அதனின் ரசீதை இணைக்க வேண்டும்.

வங்கி பெயர் : சிட்டி யூனியன் வங்கி

வங்கி கணக்கு எண் : 242001001468771

IFSC Code : CIUB0000242

வங்கி கிளை : மணலி

First published:

Tags: Aavin, Ice cream