முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் தண்ணீர் லாரி - பைக் நேருக்குநேர் மோதல் : வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்!

சென்னையில் தண்ணீர் லாரி - பைக் நேருக்குநேர் மோதல் : வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்!

விபத்தில் உயிரிழந்த பிரவீன்குமார்

விபத்தில் உயிரிழந்த பிரவீன்குமார்

Chennai Accident | விபத்தில் உயிரிழந்த பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த 27-வயதான பீரவின்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவர் நேற்றிரவு 9 மணியளவில் தாழம்பூர் கூட்ரோடில் இருந்து நாவலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். பிரவீன்குமார் கீழே விழுந்ததும் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் பின் சக்கரம் பிரவீன்குமார் தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள தண்ணீர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன்

First published:

Tags: Accident, Chennai