ஹோம் /நியூஸ் /சென்னை /

மாணவ பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை- ட்விட்டர் புகாரையடுத்து ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

மாணவ பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை- ட்விட்டர் புகாரையடுத்து ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

வழக்கு பதிவு செய்யப்பட்டவர்

வழக்கு பதிவு செய்யப்பட்டவர்

Chennai | இந்த புகார் தீயாய் பரவ, ஊபர் நிறுவனமே ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னையில் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில், மாணவ பத்திரிகையாளர் பெண் ஒருவர் தனது தோழியுடன் நேற்று இரவு ஊபர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும், விசாரிக்க பெண் போலீஸ் அனுப்பாமல் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஆண் போலீஸ் ஒருவரை அனுப்பியுள்ளனர். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

  இது தொடர்பான புகைப்படங்களும், சம்பந்தப்பட்ட ஊபர் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம், ஆட்டோவில் புகைப்படம் உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் தெரிவித்தார்.

  இந்த புகார் தீயாய் பரவ, ஊபர் நிறுவனமே ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது. மேலும்,  தாம்பரம் காவல் ஆணையரும், ஆட்டோ ஓட்டுநர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  அவசரமாக செல்வதற்காகவே ஊபர், ஓலா நிறுவனங்களில் பொதுமக்கள் ஆட்டோ முன்பதிவு செய்து செல்கின்றனர். இதனை பயன்படுத்தி ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Auto Driver, Crime News, Sexual assault allegations, Sexual harrasment