Home /News /chennai /

சென்னையில் ஆலந்தூர் அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சென்னையில் ஆலந்தூர் அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சென்னையின் முக்கிய சாலையில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கத்திபாரா பாலாம் அருகே வழிக்காட்டி பலகை இருபுறம் உள்ள கம்பங்களோடு சேர்ந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த பக்கம் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது கம்பங்கள் சரிந்துள்ளது. இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர், அதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் முக்கிய சாலையில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, படுகாயமடைந்த நபருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



     

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி