Home /News /chennai /

சென்னை தனியார் வங்கி கொள்ளை சம்பவம் - ஒருவர் கைது!

சென்னை தனியார் வங்கி கொள்ளை சம்பவம் - ஒருவர் கைது!

கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது

கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது

போலீசார் முருகனின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் தொடர்புடைய உறவினரைக் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடிய நிலையில் கொள்ளையில் தொடர்புடைய ஒருவரை  கைது செய்துள்ளனர்.

    ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கிக்குள் நேற்று புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வங்கியின் வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவின் மேலாளரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது.

    வழக்கம் போல் வங்கிக்குச் சென்ற முருகன், காவலாளி உட்பட 3 ஊழியர்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் தனது கூட்டாளிகளுக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்த பிறகு வங்கி மேலாளர் சுரேஷ் மற்றும் பெண் ஊழியர் விஜயலட்சுமி ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி, வங்கி லாக்கரை திறந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியது தெரிய வந்தது.

    Also Read : 75வது சுதந்தர தினக் கொண்டாட்டம் - தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு...ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து வாகன எண்ணைச் சென்னை காவல்துறை குழுக்களில் பதிவிட்டு வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், முருகனின் செல் நம்பர் சிக்னலை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்கள் பிடிப்பதற்காக 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் , முருகனின் குடும்பத்தினரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில், அவரது உறவினர் சக்திவேல் என்பவர் முருகனின் கொள்ளை திட்டத்துக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனிடையே, குற்றவாளிகள் தலைமறைவாக இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களை விரைந்து பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Janvi
    First published:

    Tags: Bank, Chennai, Gold Robbery, Robbery

    அடுத்த செய்தி