முகப்பு /செய்தி /சென்னை / குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் ஃபைன்..! - சென்னையில் புதிய விதி அமல்

குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் ஃபைன்..! - சென்னையில் புதிய விதி அமல்

மாதிரி படம்

மாதிரி படம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, உடன் செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை சென்னையில் அமலுக்கு வந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக சில திருத்தங்களை சென்னை பெருநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இது நாள் வரை மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதித்து வந்த நிலையில், இனி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வாகன ஓட்டுனர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மதுகுடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும், அதுவே சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆனால், ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படும்.

Also Read : என்னது புதிய புயல் வருதா.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..! - எந்த மாவட்டங்களில் எல்லாம் பாதிப்பு..?

மோட்டார் வாகனச் சட்டம் /s 185 r/w 188 MV Act விதிப்படி இந்த அபராதமானது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை போக்குவரத்து காவல் நேற்று இரவு முதல் இந்த விதியை பின்பற்றி மது குடித்து வாகனம் ஓட்டுபவர் உடன் பயணம் செய்யும் நபர்களுக்கும் அபராதம் விதித்து உள்ளது. 1000 முதல் 10,000 வரை அபராதம் வசூல் செய்யப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

First published:

Tags: Chennai Police, Drunk an drive, Traffic Police, Traffic Rules