ஹோம் /நியூஸ் /சென்னை /

பைக் மோதி 8 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த சோகம் : மதுபோதையில் வந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!

பைக் மோதி 8 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த சோகம் : மதுபோதையில் வந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!

பைக் விபத்து

பைக் விபத்து

விசாரணையில் உயிரிழந்த பூங்குழலி அதிகாலை பூஜை செய்வதற்காக அர்ச்சகரை அழைக்க சென்றதும்,. அப்போது சாலையை கடக்க முயன்றபோது உயிரிழந்ததும் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரால் 8 மாத குழந்தையுடன் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகே அமைந்தகரை என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த பூங்குழலி(28)  என்பவர் தனது 8 மாத பெண் குழந்தையுடன் அதிகாலை 3:30 மணியளவில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்சாலையில் கே.டி.எம் பைக்கில் பெண் ஒருவருடன் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மற்றும் அவரது 8 மாத பெண் கைக்குழந்தை மீது வேகமாக மோதியுள்ளார். இதில்,  பூங்குழலி மற்றும் அவரது 8 மாத பெண் கைக்குழந்தையும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் வந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இருவரின் உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காதலர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த நிக்கல் (27) என்பதும், இவர் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் ப்ராஜெக்ட் அசோசியேட்டாக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவரும் இவரது காதலியும் நேற்று இரவு முழுவதும் பார்ட்டியில் மது அருந்திவிட்டு, போதையிலேயே பைக்கில் சென்னையை சுற்றி வலம் வந்துள்ளனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக இருவர் மீது ஏற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க | ஆடு திருடியதாக சண்டை! துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை! கோவையில் பரபரப்பு!

இவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், மரணம் விளைவித்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுகுடித்து வாகனம் ஓட்டுதல், மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும், விசாரணையில் உயிரிழந்த பூங்குழலி அதிகாலை பூஜை செய்வதற்காக அர்ச்சகரை அழைக்க சென்றதும், அப்போது சாலையை கடக்க முயன்றபோது உயிரிழந்ததும் தெரியவந்தது. பூங்குழலிக்கு கடந்த பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தற்போதுதான் 8 மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Accident, Chennai, Crime News, Death