ஹோம் /நியூஸ் /சென்னை /

குடிபோதையில் 16வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல் - போதை இளைஞர் கைது

குடிபோதையில் 16வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல் - போதை இளைஞர் கைது

இளைஞர் கைது

இளைஞர் கைது

Tiruvottiyur | சென்னை திருவிக நகரில் 16 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvottiyur, India

  சென்னை திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். கணவரைப் பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக இருந்து வருகிறார். நேற்று காலை தனது 16 வயது மகளுடன் கடைக்கு செல்வதற்காக புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்பொழுது இவரது மகள் கீழே நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த  மர்ம நபர் சிறுமியை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.

  சிறுமி உடனே கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். கும்பல் கூடியதும் அங்கிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமியின் தாயார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருவிக நகர் போலீசார் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குடி போதையில் வந்த நபர் திருவிக நகர் ஒற்றைவடை 2-வது தெருவை சேர்ந்த வசந்தகுமார் (33) என்பது தெரிய வந்தது.

  Also Read:  என் கூட வாங்க நல்லா காசு பார்க்கலாம்.. நரபலிக்காக விரித்த வலை - வெளியாகும் அதிர்ச்சி தகவல்

  இவர் மீது ஏற்கனவே திருவிக நகர் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ளன. இதனையடுத்து திருவிக நகர் போலீசார் வசந்தகுமாரை பிடித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: அசோக் குமார்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Chennai, Crime News, Sexual harrasment