Home /News /chennai /

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கணவனின் நண்பன் பாலியல் வன்கொடுமை: காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கணவனின் நண்பன் பாலியல் வன்கொடுமை: காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையையொட்டிய தாம்பரத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி கணவரின் நண்பன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற இளஞ்ஜோடிகள் போலீசாரிடம் தனது நண்பன் என் மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை என் மனைவியிடம் காண்பித்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி புகார் அளித்துள்ளனர்.

    உடனே இது குறித்து விசாரிப்பதற்காக அந்த இளம் ஜோடிகள் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மகளிர் போலீசார் இருவரையும் விசாரணை செய்தபோது அவர்கள் இருவரும் நேபாள மொழியில் பேசியதால் போலீசாருக்கு மொழி புரியாமல் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் மொழிபெயர்ப்பாளரை வரவைத்து விசாரணையை தொடங்கினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இளம் ஜோடிகள் இருவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காலித் ஹாசன்(வயது-24) அவரது மனைவி 14-வயது சிறுமி என அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் கிடைத்தது.

    14-வயது சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது ஆசை வார்த்தை கூறி  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் காலித் ஹாசன். திருமணம் முடிந்த பிறகு எங்கு சென்று வாழ்க்கையை தொடங்குவது என்று நினைத்தபோது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தபரூக் ஹுசேன் (வயது-28) என்ற நண்பர் சென்னை குரோம்பேட்டை துர்கா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து கொண்டிருப்பதால் அவரை தொடர்பு கொண்டுள்ளார். என் மனைவியை அழைத்துக் கொண்டு நான் சென்னைக்கு வருவேன் என கூறிவிட்டு தம்பதிகள் இருவரும் ஏப்ரல் மாதம் சென்னைக்கு வந்துள்ளனர்.

    ஒரே வீட்டில் இளம் தம்பதிகளும் அவரது நண்பரும் தங்கியுள்ளனர். நண்பர்கள் இருவரும் கட்டிட வேலைக்காக வேலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு காலித் ஹாசன் வேலைக்கு தயாராகி அவரது நண்பரை அழைத்துள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தபரூக் ஹுசேன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த 14-வயது சிறுமி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

    அப்போது தபரூக் ஹுசேன், சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அந்தச் சிறுமியிடம் காட்டி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் வீடியோவை
    சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுபோன்று கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து சிறுமியை மிரட்டி
    பாலியல் பலாத்காரம் செய்து வந்தால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தன் கணவரிடம் தெரிவித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அதன்பிறகு போலீசார் தபரூக் ஹுசேன் என்பவரை கைது செய்து தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காலித் ஹாசனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் மீண்டும் ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாக ஒப்புக்கொண்டார்.

    அதன் பின்னர் சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காலித் ஹாசன் மற்றும் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தபரூக் ஹுசேன் இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் 14-வயது சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai, Rape case

    அடுத்த செய்தி