Home /News /chennai /

சாலையில் செல்லும் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபர் கைது.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

சாலையில் செல்லும் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபர் கைது.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

தனியாக செல்லும் பெண்களிடம் சில்மிஷம்.. வாலிபர் கைது..

தனியாக செல்லும் பெண்களிடம் சில்மிஷம்.. வாலிபர் கைது..

திருமணம் செய்து வைக்காத விரக்தியால் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் பெண்களை தொட ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாகவும் விசாரணையில் வாக்குமூலம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    சாலையில் நடந்து செல்லும் பெண்களின் மார்பகத்தையும், பின் பகுதியையும் கையால் தட்டி செல்லும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் சிவக்குமாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், பின்னாள் கையில் தட்டிவிட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரையடுத்து, வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சிவக்குமார் அவரது தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அதில், வாலிபர் ஒருவர், சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின் பகுதியை கையால் தட்டி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

    ALSO READ | போதை மாத்திரைகள் வீட்டுக்கே டோர் டெலிவரி.. Zomato ஊழியர் சிக்கியது எப்படி?

    இதையடுத்து அந்த நபர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை  கொண்டும் புலன் விசாரணையை மேற்கொண்டதில் அவர், சென்னை மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை ராகவா நகர் 11வது பிரதான சாலையை சேர்ந்த 22-வயதான அஜித்குமார் என்பது தெரியவந்தது.

    பின்னர் அவரை கைது செய்து, காவல்நிலையல் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் அஜித்குமார் என்றும் அவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.மேலும், கடந்த 10 நாட்களாக சென்னை மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, பழவந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பின் பகுதியை இருசக்கர வாகனத்தில் சென்றவாறு கையால் தட்டிவிட்டு செல்லும் பழக்கத்தில் ஈடுட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ALSO READ | பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது!

    வீட்டில் அஜித்குமாருக்கு திருமணம் செய்து வைக்காத விரக்தியால் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் பெண்களை தொட ஆசைப்பட்டு பெயிண்ட் வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் இதற்கென தனி நேரத்தை ஒதுக்கி வீட்டிலிருந்து அவரது பைக்கை எடுத்துக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தனியாக நடந்து செல்லும் பெண்களின் மார்பகத்தையும், பின் பகுதியையும் பைக்கில் சென்றபடி கையால் தட்டி செல்வதால் மகிழ்ச்சியடைவதாகவும் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இதுபோன்ற பாலியல் தொந்தரவு கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த 2018ம் ஆண்டு சிறாராக இருக்கும் போது மணிகண்டன் என்ற வாலிபரை கொலை செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.

    செய்தியாளர்: வினோத்கண்ணன், இசிஆர்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Arrest, Chennai, Crime News, Sexual harrasment

    அடுத்த செய்தி