Home /News /chennai /

மனைவி கண்முன்னே ரவுடி கொலை செய்யப்பட்ட கொடூரம்.. என்ன நடந்தது?

மனைவி கண்முன்னே ரவுடி கொலை செய்யப்பட்ட கொடூரம்.. என்ன நடந்தது?

 கொலை செய்யபடவர் ரவுடி சரவணன்

கொலை செய்யபடவர் ரவுடி சரவணன்

கடந்த 2018ஆம் ஆண்டு  சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சரவணன் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளிவந்ததாக தகவல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
சென்னையில் காவலர் குடியிருப்பு முன்பு, மனைவியின் கண் முன்னே ரவுடியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 தனிப்படை அமைத்து போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை திருவான்மியூர் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 33 வயதான சரவணன், அவரது மனைவி ரெபேக்காவுடன் இருசக்கர வாகனத்தில் அவர்களின் குழந்தைக்கு புத்தகம் வாங்க சென்றுள்ளனர். நேற்று மாலை சுமார் 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சரவணனை பின் தொடர்ந்து வந்த 2 பேர், திருவான்மியூர் பாரதிதாசன் தெரு அருகே காவலர் குடியிருப்பு வளாகத்தில் வைத்து சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளனர்.

ALSO READ | கடலூரில் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்ற 11ம் வகுப்பு மாணவி: 10ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, செய்வதறியாது திகைத்து நின்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவான்மியூர் போலீசார் சரவணனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விசாரணையில் சரவணன், கடந்த 2018ஆம் ஆண்டு  சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விட்டு கடந்து மூன்று மாதத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான பழிக்கு பழிதான் சரவணன் கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: வினோத் கண்ணன், சென்னை
Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Crime News, Murder

அடுத்த செய்தி