ஹோம் /நியூஸ் /சென்னை /

ப்ளாக்கில் மதுபாட்டில்! கோஷ்டி பிரச்னையில் தூய்மை ப ணியாளர் குத்திக்கொலை!

ப்ளாக்கில் மதுபாட்டில்! கோஷ்டி பிரச்னையில் தூய்மை ப ணியாளர் குத்திக்கொலை!

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Chennai | யாரிடம் மதுபாட்டில் வாங்கினால் என்ன எனது விருப்பம் என கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  சென்னையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் மாநகராட்சி தூய்மை பணியாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை கண்ணகி நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வருகின்றன. மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்கிற ஒரு தரப்பும் மற்றொரு தரப்பான குணால் என்கிற தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன்(31) நேற்று நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரிடம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் வாங்கியுள்ளார். இதைப் பார்த்த மற்றொரு தரப்பை சேர்ந்த குணால் மணிகண்டனை அழைத்து என்னிடம் மது பாட்டில் வாங்காமல் ஏன் முத்துவேலிடம் மதுபாட்டில் வாங்கினாய் என கேட்டதாக கூறப்படுகிறது.

  அதற்கு மணிகண்டன் மதுபாட்டில் யாரிடம் வாங்கினால் என்ன என்னுடைய விருப்பம் என கூறியுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும் குணாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஆத்திரமடைந்த குணால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  ALSO READ | 7ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை முயற்சி.. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

  இதனை கண்டு அச்சமடைந்த குணால் அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்து, தப்பியோடிய குணாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: வினோத்கண்ணன், இசிஆர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Crime News, Murder