Home /News /chennai /

வங்கியில் லோன் வாங்கி ஆன்லைன் ரம்மி.. கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்

வங்கியில் லோன் வாங்கி ஆன்லைன் ரம்மி.. கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர் தொடர்ச்சியாக நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாண்டு பணத்தை இழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மேற்கு மாம்பலம் கிரி தெருவில் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழ்ச்செல்வி சென்றுள்ளார். அப்போது கிரி தெரு வழியாக தமிழ்செல்வி நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் திடீரென தமிழ்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதனை பார்த்து பொதுமக்கள் விரட்டி சென்று செயின் பறித்து சென்ற இளைஞரை பிடித்து அடித்து, அசோக் நகர் காவல் நி்லையத்தில் ஒப்படைத்தனர். அசோக் நகர் போலீசார் பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த சரவணன்(27) என்பது தெரியவந்தது.

சரவணன் சிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்து விட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான சரவணன் வங்கி மற்றும் நண்பர்களிடம் சுமார் 7 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்த நிலையில் பல மாதங்களாக வங்கி தவணை கட்டாததால் வங்கியிலிருந்து கடன் மாதத்தவணை கட்ட சொல்லியுள்ளனர். அதேபோல நண்பர்களும் கடன் தொகையை திருப்பி கேட்டுள்ளனர்.

ALSO READ | பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய்மாமன்.. தப்பித்த சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

கடனை அடைப்பதற்காக சரவணன் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் முதன்முறையாக சரவணன் வழிப்பறியில் ஈடுப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் உள்ள கட்டுமான பணி நிறுவனத்தில் தேர்வாகி மாதம் ரூ.37,800 ரூபாய் சம்பளத்தில் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர் தொடர்ச்சியாக நண்பர்களிடமும் வங்கியிலும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாண்டு பணத்தை இழந்துள்ளார். வருகின்ற ஜனவரி மாதம் இவருக்கும் இவரது காதலிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் வங்கி கடனை அடைப்பதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது காதலி மற்றும் காதலியின் குடும்பத்தார்கள் கடனை அடைப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சம் பண உதவி செய்துள்ளனர். அந்தப் பணத்தையும் இவர் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.

இதனையடுத்து அசோக் நகர் போலீசார் கைது செய்யப்பட்ட சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி, அந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்து பின் கடனை அடைப்பதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் மாணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Crime News, Online crime, Online Frauds, Online rummy

அடுத்த செய்தி