ஹோம் /நியூஸ் /சென்னை /

கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து திருமண மோசடி... 3 பெண்களை மணந்தவர் கைது

கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து திருமண மோசடி... 3 பெண்களை மணந்தவர் கைது

திருமண மோசடி

திருமண மோசடி

ஏமாற்றிய பணத்தில் விலை உயர்ந்த கார், வாட்ச் என்றும் 10 நாட்களுக்கு கோவா, மசாஜ் சென்டர் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் 30 நாட்களில் ரூ. 36 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. 

  சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவர், ஆன்லைனில் வரன் தேடியுள்ளார்.

  அதில் ஹபீப் ரஹ்மான் (38) என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட நபர் ஒருவர் தான் திருமணமானவர் என்றும், தனது மனைவி இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். அதன் படி விலையுயர்ந்த காரில் வந்திறங்கிய ஹபீப்பை நேரில் பார்த்தவுடன் பிடித்துவிட்டதால், திருமண பேச்சை தொடங்கியுள்ளனர்.

  இதனை சாதகமாக பயன்படுத்திய ஹபீப் ரஹ்மான், முதற்கட்டமாக 60 ஆயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது. 2 நாட்களில் தருகிறேன் என கூறி வாங்கியுள்ளார். பின்னர் ஐந்து நாட்கள் கழித்து கிஷ்கிந்தா பக்கத்தில் தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம்  இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும்,  நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து நம் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறி அவரிடம் 10 லட்சம் ரூபாயையும் வாங்கியுள்ளார். இப்படி சிறுக சிறுக 30 நாட்களில் ரூ. 36 லட்சம் மற்றும் 13 சவரன் தங்க நகையை ஏமாற்றி வாங்கியுள்ளார். பின்னர் மெசேஜில் பணம் கொடுத்ததற்கு நன்றி என அனுப்பிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.

  3 மாதங்களாக தலைமறைவாகியிருந்த ஹபீப்பை தேடி ஓய்ந்த பெண், ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்படைந்து, போலீசில் புகார் அளித்தார். இதன் படி 5 தனிப்படை அமைத்து ஹபீப்பை தேடி வந்த போலீசார், பூந்தமல்லியில் அவரது மனைவியுடன் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஹபீப் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று, அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

  ALSO READ | கோவையில் மருத்துவமனையிலேயே மனைவியை குத்திக் கொன்ற கணவன்

  விசாரணையில், அவருக்கு ஏற்கனவே 3 திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்களின் தொலைபேசி எண்களை பெற்று இந்த லீலைகளை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  மேலும், இப்படி ஏமாற்றிய பணத்தில் விலை உயர்ந்த கார், வாட்ச், ஆடைகள் என்றும், 10 நாட்களுக்கு கோவா, மசாஜ் சென்டர் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹபீப்பை சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச், கார், 2 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

  செய்தியாளர்: சுரேஷ், சென்னை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Crime News