Home /News /chennai /

விண்ணுலகில் ஒன்றாக வாழ்வோம்... காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன் உருக்கமான கடிதம்

விண்ணுலகில் ஒன்றாக வாழ்வோம்... காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன் உருக்கமான கடிதம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையில் விண்ணுலகில் ஒன்றாக வாழ்வோம் என்று காதலியை கொன்று தானும் கொலை செய்து கொண்ட காதலன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பகுதியில் அமைந்துள்ள  லாட்ஜ் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்கள் வெகு நேரம் கதவைத் தட்டியும் உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்காததால் சந்தேகத்தின் பேரில் லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 25 வயது மதிக்கத்தக்க ஆணும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

மேலும், அந்தப் பெண் முகத்தில் தலையணையால் அழுத்தப்பட்டு இருப்பதும் பெண்ணின் உடல் அழகிய நிலையிலும் இருந்துள்ளது. ஆண் உடல் அழுகாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரின் விசாரணையில் கடந்த 3-ம் தேதி இரவு தாங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கணவன் மனைவி எனவும் தங்களுக்கு அறை வேண்டுமெனவும் கேட்டதாக லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில் இறந்து கிடந்த நபர்கள் மேற்கு வங்கம் மாநிலம், பங்குரா மாவட்டம், ராதா நகரை சேர்ந்த பிரசஞ்சித் கோஷ்(23) மற்றும் மேற்குவங்கம் மாநிலம், பங்குரா மாவட்டம் பிஷ்ணுபூர் பகுதியைச் சேர்ந்த அர்ப்பிட்டா பால் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை வந்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்தது.

Also Read : பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய்மாமன்.. தப்பித்த சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

கடந்த 3- ம் தேதி இரவு சென்னை வந்த இவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் அறை எடுத்து தங்கியதும், பின் காதலன் பிரசஞ்சித் கோஷ் தனது காதலியை முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு ஓரிரு நாட்கள் காதலியின் சடலத்தோடு தங்கி இருந்து பின் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

காதலன் பிரசஞ்சித் கோஷ் வங்காள மொழியில் எழுதிய உருக்கமான கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த கடிதத்தில் "எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இப்போதாவது சந்தோஷம் அடையட்டும். இனிமேல் நாங்கள் இருவரும் விண்உலகில் ஒன்றாக வாழ்வோம் எனவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். உடற்கூராய்வுக்காக இருவரின் சடலங்களையும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Chennai, Crime News

அடுத்த செய்தி