Home /News /chennai /

நீங்கள் யார்..? கலைஞருக்கும் உங்களுக்கும் என்ன உறவு..? உதயநிதியை திகைக்க வைத்த அரசுப்பள்ளி மாணவி

நீங்கள் யார்..? கலைஞருக்கும் உங்களுக்கும் என்ன உறவு..? உதயநிதியை திகைக்க வைத்த அரசுப்பள்ளி மாணவி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin : இளம் தலைமுறையினர் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் மிக தைரியமாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியாக கூறினார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் நீங்கள் யார் என்று அரசு பள்ளி மாணவி கேள்வி எழுப்பிய ருசிகர சம்பவம் அரங்கேறியது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான தொடக்க நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது பேசிய உதயநிதி, தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவி, தன்னை யார் என்று கேட்டதாகவும், உங்களுக்கு கலைஞர் என்ன உறவு என்று கேட்டதாகவும், நான் கலைஞரின் பேரன் என்று அதற்கு பதிலளித்தாகவும்  தெரிவித்தார்.

    Must Read : 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வாகிறார்

    இந்த அளவுக்கு இளம் தலைமுறையினர் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் மிக தைரியமாக இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, DMK, School student, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி