முகப்பு /செய்தி /சென்னை / வணிக வளாக கட்டடத்தின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சோகம் : இருவர் கைது

வணிக வளாக கட்டடத்தின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சோகம் : இருவர் கைது

உயிரிழந்த சிறுமி

உயிரிழந்த சிறுமி

750 கிலோ எடை கொண்ட கேட் சிறுமியின் மீது சரிந்ததில் அவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் வணிக வளாக கட்டடத்தின் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கீழ்பாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வாணி, அதே பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சங்கரின் மனைவி, தனது 5 வயது மகள் ஹரிணியுடன் கணவரை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார்.

இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு வாணி உள்ளே சென்ற போது, அங்குள்ள இரும்பு கேட்டின் அருகே சிறுமி ஹரிணி விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த கேட்டை காவலாளி பூட்டும்போது இரும்பு கேட் சரிந்துள்ளது. 750 கிலோ எடை கொண்ட கேட் சிறுமியின் மீது சரிந்ததில் அவர் படுகாயமடைந்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, காவலாளி சம்பத், வணிக வளாக மேலாளர் சீனிவாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

First published:

Tags: Chennai