Home /News /chennai /

யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு.. இளைஞர் சராமாரியாக வெட்டிக் கொலை.. சென்னையில் அதிர்சி சம்பவம்

யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு.. இளைஞர் சராமாரியாக வெட்டிக் கொலை.. சென்னையில் அதிர்சி சம்பவம்

சென்னையில் வாலிபர் கொலை

சென்னையில் வாலிபர் கொலை

Chennai | குள்ளக்குமார் 15 நாட்களாக காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில், அவரை கொலை செய்ய நேரம் பார்த்து காத்திருந்து பழி வங்கியுள்ளனர்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை நுங்கம்பாக்கம் குளக்கரை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 22 வயதான குள்ள குமார். இவர் மேல். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது யார் ஏரியாவில் பெரிய ரவுடி என்பதில் சண்டை ஏற்பட, அதில் குள்ள குமார் சாம்பார் தனசேகர் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

    கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் குள்ளகுமாரை கைது செய்து விசாரித்து வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்தச் சம்பவத்துக்கு பழி வாங்க காத்திருந்த தனசேகர் தனது கூட்டாளிகளான சங்கு பார்த்திபன் மற்றும் ராஜா ஆகியோருடன் திட்டம் தீட்டினார்.

    Read More : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை... அலங்காநல்லூரில் சோக சம்பவம்


    செவ்வாய் மாலை 6 மணி அளவில் நுங்கம்பாக்கம் குளக்கரைச் சாலையில் உள்ள தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த குமாரை அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் தனசேகர் தனது கூட்டாளிகளுடன் சுற்றி வளைத்தார். கும்பல் குள்ளக்குமார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நள்ளிரவு சிக்சிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நுங்கம்பாக்கம் அருகே ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், 2 மாதங்களுக்கு முன் குள்ள குமார் தன்னை கத்தியால் குத்தியதாகவும் அதற்கு பழி வாங்கவே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்

    தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்காமல் தானே பழிவாங்க நினைத்துள்ளார் தனசேகர்.. ஆனால் போலீசார் தரப்பில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். குள்ளக்குமார் 15 நாட்களாக காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில், அவரை கொலை செய்ய நேரம் பார்த்து காத்திருந்தனர்.

    செவ்வாய்க்கிழமை தனியாக சிக்கிய போது கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட நபர்களிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Crime News

    அடுத்த செய்தி