Home /News /chennai /

விஜயின் தலைமை ரசிகர் மன்ற அலுவலகத்தில் உயிரிழந்து கிடந்த தொழிலாளி

விஜயின் தலைமை ரசிகர் மன்ற அலுவலகத்தில் உயிரிழந்து கிடந்த தொழிலாளி

விஜய் ரசிகர் மன்ற அலுவலகம்

விஜய் ரசிகர் மன்ற அலுவலகம்

சென்னையை ஒட்டிய ஈசிஆரில் உள்ள நடிகர் விஜயின் ரசிகர் மன்ற அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பெயின்டர் உயிரிழந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் விஜயின் ரசிகர் மன்றத் தலைமை அலுவலகம் உள்ளது. அந்த தலைமை அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான பிரபாகரன், விஜய்யின் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பெயிண்ட் வேலை செய்து வந்துள்ளார்.

சனிக்கிழமை அன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தை காண பழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்ற பிரபாகரன் நேற்று இரவு 8 மணி அளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்க்கு வந்துள்ளார். அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், பரோட்ட வாங்க 100 ரூபாய் தரும்படி கேட்டு பெற்றுக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை உடன் வேலை பார்க்கும் மற்ற வேலையாட்கள் அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை கிடைந்ததை பார்த்து அதிர்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக பிரபாகரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அளவுக்கு அதிகமான மது போதையில் பரோட்டா சாப்பிட்டதில் மூச்சு குழாயில் பரோட்டோ அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர். மது போதையில் பரோட்டா சாப்பிட்ட நடிகர் விஜய் வீட்டில் வேலை செய்து வந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: வினோத்குமார்
Published by:Karthick S
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி