ஹோம் /நியூஸ் /சென்னை /

மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு...

மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு...

குழந்தை தியா

குழந்தை தியா

Maduravoyal | மதுரவாயல் கங்கையம்மன் 8வது தெரு பகுதியில் தியா என்ற 2 வயது குழந்தை வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Maduravoyal, India

  சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகர் 8 வது தெரு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ்-பூர்ணிமா தம்பதியரின் ஒரே மகள் தியா (2 வயது). இவர்கள் வீட்டின் அருகேயே அத்தை மகேஸ்வரி வீடு முதல் மாடியில்  உள்ளது. நேற்று முன் தினம்  இரவு குழந்தை வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.

  சுயநினைவை இழந்த குழந்தையை மீட்டு பெற்றோர்  சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குழந்தை சிகிச்சை பழனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

  Also see... 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்.. நீல வண்ண பட்டாடையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இடுக்கி மலைகள்

  இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Child, Crime News, Dead, Maduravoyal Constituency