Home /News /chennai /

மாடியில் ஏசி வைத்திருப்பவர்களே உஷார்..! சென்யைில் மாடி விட்டு மாடி தாவி ACயின் காப்பர் பைப் திருடும் கும்பல்..!

மாடியில் ஏசி வைத்திருப்பவர்களே உஷார்..! சென்யைில் மாடி விட்டு மாடி தாவி ACயின் காப்பர் பைப் திருடும் கும்பல்..!

காப்பர் பைப் கொள்ளை

காப்பர் பைப் கொள்ளை

chennai | 6 வீடுகளின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த ACயின் copper pipe களை மட்டும் திருடி சென்றதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    கொரட்டூரில் மாடி விட்டு மாடி தாவி அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் ACயின் காப்பர் பைப்களை குறி வைத்து திருடும் சிறார் கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.

    சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 18 வது தெருவில் உள்ள ரூபி என்கிளேவ் என்னும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மாடிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள 6 வீடுகளின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த ACயின் copper pipe களை மட்டும் திருடி சென்றதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரட்டூர் அக்ரஹாரம், சீனிவாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பிலும் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் மாடி வீட்டு மாடி தாவி காப்பர் பைப்புகளை திருடி வருவதாக புகார் எழுந்தது.'

    ALSO READ | போதை மாத்திரைகள் வீட்டுக்கே டோர் டெலிவரி.. Zomato ஊழியர் சிக்கியது எப்படி?

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொரட்டுர்  காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து வந்த போலீசார், நேற்று இரவு அதே பகுதிக்கு மீண்டும் காப்பர் பைப்புகளை திருட வந்த கொரட்டூர் தேவர் நகர் பகுதியைச் சேர்ந்த சிறார் குற்றவாளிகள் சிவப்பிரியன்(16), விஷால் (16), தேவராஜ் (16), சதீஷ் (16) ஆகிய நான்கு பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 25 கிலோ காப்பர் பைப்புகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: AC, Chennai, Crime News, Theft

    அடுத்த செய்தி