Home /News /chennai /

'ஒரே மன உளைச்சல்.. ஆசிரியர்கள் தான் காரணம்' - 9ம்  வகுப்பு மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை

'ஒரே மன உளைச்சல்.. ஆசிரியர்கள் தான் காரணம்' - 9ம்  வகுப்பு மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை

மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை

மாணவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை

மாணவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் பள்ளி ஆசிரியர்கள் துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தந்து தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் அடித்து துன்புறுத்தியதால் மன  உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக அம்பத்தூர் பாடியில் 9ம்  வகுப்பு மாணவன் உருக்கமான வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சேகர் (46). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மூத்த மகன் பார்த்தசாரதி (18). இவர், தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14) இவன் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சேகர், தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.

    அதன் பிறகு, பாரதிராஜா, பாரதி செல்வா ஆகிய இருவரும் வீட்டு கதவை பூட்டி விட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை கல்லூரி படிப்பு முடித்து வீட்டிற்கு பாரதிராஜா வந்த போது, அங்கு பாரதி செல்வா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.  அதில்,  தன்னை பள்ளி ஆசிரியர்கள் அடித்து கொடுமை படுதுவதாகவும் இதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இந்த உலகத்தை பிடிக்கவில்லை  என பதிவிட்டுள்ளார். ‘ தனது சாவுக்கு பெற்றோர் காரணம் அல்ல முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் ‘ என வீடியோவில் கூறியுள்ளார். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

    ALSO READ | ஸ்வாதி கொலை வழக்கு: ‘ராம்குமார் கழுத்தை போலீஸ்தான் அறுத்திருக்கவேண்டும்’ - திருமாவளவன் எம்பி

    முன்னதாக தந்தை கண்டித்ததால்  தற்கொலை செய்துகொண்டர் என புகார் அளிக்கப்பட நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai, Crime News

    அடுத்த செய்தி