ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை மாநகராட்சிக்கு 9 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தவில்லை... ஊக்கத் தொகை பெற 5 நாட்களே உள்ளது

சென்னை மாநகராட்சிக்கு 9 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தவில்லை... ஊக்கத் தொகை பெற 5 நாட்களே உள்ளது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Property Tax Chennai | ஐந்து நாட்களே காலக்கெடு உள்ள நிலையில் 9 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஐந்து நாட்களே காலக்கெடு உள்ள நிலையில் 9 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அடுத்த ஐந்து நாட்களில் செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-2023 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2022-2023 ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி 696.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய இறுதி நாளான செப்டம்பர் 30ம் தேதி மட்டும் 55.30 கோடி வசூலாகி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Read More : முதலில் யார் செல்வது.. பார்ப்போமா!- டிரைவர்கள் போட்டியால் கவிழ்ந்த பள்ளி வாகனம்: 20 மாணவர்கள் காயம்

13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 4 லட்சம் பேர் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியுள்ளனர் என்றும் உரிய நேரத்தில் சொத்து வரி செலுத்திய சொத்துரிமையாளர்களுக்கு இதுவரை 1.25 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் விரைந்து சொத்து வரியை செலுத்த மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

காலக்கெடு கடந்து சொத்துவரி செலுத்துவோருக்கு சொத்து வரியில் இருந்து கூடுதலாக விதிக்கப்படும் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிப்பில் சென்னை மாநகராட்சி விலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Chennai, Chennai corporation, Property, Property tax