ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் தரையிறங்க முடியல.. மாண்டஸ் புயலால் திரும்பிச் சென்ற விமானங்கள்!

சென்னையில் தரையிறங்க முடியல.. மாண்டஸ் புயலால் திரும்பிச் சென்ற விமானங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Mandous Cyclone: மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு வந்த சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு 9 விமானங்கள் திரும்பி அனுப்பப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக ஏற்கனவே பக்ரைன் விமானம் ஹைதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூர், டெல்லி, மற்றும் ஒரு பெங்களூர் விமானம் ஆகிய இடங்களிலிருந்து வந்த 5 விமானங்கள் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில் தற்போது மேலும் 3 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் திரும்பிச் சென்றுள்ளன.

இதையும் படிக்க :  மாண்டஸ் புயல்: சென்னை ஈசிஆர் சாலையில் நிறுத்தப்பட்ட போக்குவரத்து!

திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன. அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், இந்த 3 விமானங்களும், ஹைதராபாத்திற்கு திரும்பிச் சென்றன.

மேலும் பல விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்தபடி இருக்கின்றன.அந்த விமானங்களும் இன்னும் சிறிது நேரத்தில் பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

First published:

Tags: Chennai, Chennai Airport, Cyclone Mandous