ஹோம் /நியூஸ் /சென்னை /

பங்கு சந்தையில் முதலீடு.. ரூ. 37 லட்சத்துக்காக ஆள் கடத்தல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

பங்கு சந்தையில் முதலீடு.. ரூ. 37 லட்சத்துக்காக ஆள் கடத்தல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்

Chennai | 8 பேர் கொண்ட கும்பல் சீத்தாராமனை காரில் கடத்திச் சென்று மிரட்டி ஒரு வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டபின் நங்கநல்லூர் சித்தி விநாயகர் கோயில் பகுதியில் சீத்தாராமனை இறக்கி விட்டு சென்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  சென்னை வில்லிவாக்கத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணத்தை திரும்பி பெற கூட்டாளியை ஆள் வைத்து கடத்தி சென்று வெற்று பத்திரிகையில் கையெழுத்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள  தனியார்  ஓட்டலில் மேனேஜராக பணிப்புரிந்து வருபவர் சீதாராமன் (58). இவர் கடந்த 2018 முதல் 2021 வரை திருநெல்வேலி அழகு நேரி தச்சநல்லூரில் பசை தயாரிக்கும் கம்பெனியை தனது நண்பர் நெல்லையப்பன் என்பவரோடு இணைந்து ஓர்க்கிங் பார்ட்னராக பணியாற்றி வந்துள்ளார்.

  இந்த கம்பெனியில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டு பிரிந்து சென்ற சீதாராமன் சொந்தமாக ஆன்லைன் ஷேர்மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இதில் நெல்லையப்பன் ரூ.7 லட்சமும், நெல்லையப்பனின் மாப்பிள்ளை கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து  ரூ. 20 லட்சமும் முதலீடு செய்துள்ளனர். இதில்,10 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது.

  இந்த 37 லட்ச ரூபாயை சீதாராமன் திருப்பிக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் திடீரென பங்குச்சந்தை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ. 37 லட்சத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் 1  வருடம் கால அவகாசம் கேட்டுள்ளார் சீதாராமன். இந்நிலையில் நேற்று சீத்தாராமன் ஆதம்பாக்கம் பகுதியில் தனது மகனை சந்திக்க வந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் சீத்தாராமனை காரில் கடத்திச் சென்று மிரட்டி ஒரு வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டபின் நங்கநல்லூர் சித்தி விநாயகர் கோயில் பகுதியில் சீத்தாராமனை இறக்கி விட்டு சென்றுள்ளது.

  இந்த சம்பவம் குறித்து சீத்தாராமன் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமாரிடம்  புகார் அளித்தார் இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராஙக் டி.ரூபன் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டதனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

  ALSO READ | கருப்பாக இருப்பதாக கேலி செய்த கணவன்.. ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. சத்தீஸ்கரில் பயங்கரம்

  அதில்,  சீதாராமன் நடத்திய பங்குச்சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்த கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வழக்கறிஞர் தங்கராஜ், பிரபா மற்றும் கார் ஓட்டுனர் சதீஷ் உட்பட 5 பேர் சேர்ந்து கொடுத்த பணத்திற்கு ஆதாரம் இல்லாததால், பணத்தை திரும்ப பெறுவதற்காக சீதாராமனை கடத்தி சென்று ஒரு வீட்டில் தங்க வைத்து மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, கணேஷ் மற்றும் கார் ஓட்டுனர் சதீஷ்குமாரை கைது செய்த போலீசார்,  தலைமறைவாகியுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  செய்தியாளர்: சுரேஷ் ( சென்னை)

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Kidnap, Villivakkam Constituency