ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் பைக் ரேஸ்.. 8 பேர் கைது - எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை!

சென்னையில் பைக் ரேஸ்.. 8 பேர் கைது - எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை!

பை ரேஸ் - 8 பேர் கைது

பை ரேஸ் - 8 பேர் கைது

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக மேலும் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சென்னை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுவோரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாண்டிபஜார், சிந்தாதரிபேட்டை பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மேலும் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், விதிமீறலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புத்தாண்டிற்கு பிறகே உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Bike race, Chennai