ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை கோயம்பேடுக்கு நள்ளிரவில் வந்தடைந்த 7000 டன் காய்கறிகள்.. இன்று தட்டுப்பாடு இருக்காது!

சென்னை கோயம்பேடுக்கு நள்ளிரவில் வந்தடைந்த 7000 டன் காய்கறிகள்.. இன்று தட்டுப்பாடு இருக்காது!

கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தை

புயலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் நேற்றிரவு கனமழை பெய்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயலின் தாக்கத்துக்கு மத்தியில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, 7000 டன் காய்கறிகள் நள்ளிரவில் வந்தடைந்தன.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 9 மணி முதல் தொடங்கிய காற்றின் தாக்கம் அதிகாலை 3 மணிக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் லேசான காற்றே வீசியது.

புயலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் நேற்றிரவு கனமழை பெய்தது.  இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம், உதகை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான லாரிகளில் ஏழாயிரம் டன் காய்கறிகள் வந்தடைந்தன.

சென்னை மாநகரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.

இதற்கிடையே புயலின் தாக்கத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று கோயம்பேடு சந்தைக்கு வராததால், 3000 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai rains, Koyambedu Market