Home /News /chennai /

சென்னை அருகே 7 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோவில் கைது…

சென்னை அருகே 7 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோவில் கைது…

கைது செய்யப்பட்ட மகேஷ் குமார்.

கைது செய்யப்பட்ட மகேஷ் குமார்.

குழந்தையின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில், மகேஷ்குமார் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை அருகே 7 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 33 வயதான பெண் ஒருவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக பிரிந்து 33 வயதான மகேஷ்குமார் என்பவருடன் முறையற்ற உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தையின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில், மகேஷ்குமார் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

    விநாயகர் சிலை ஊர்வலம்.. நிபந்தனைகளுடன் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

    இதுகுறித்து தாய்க்கு மகேஷ்குமார் தெரிவித்தவுடன் வீட்டிற்கு வந்த தாய், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பரிசோதித்துள்ளார். அப்பொழுது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் மருத்துவர்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, போலீசார் மகேஷ்குமாரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் மகேஷ்குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Child Abuse, Crime News, POCSO case

    அடுத்த செய்தி