10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6.70 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பான ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம் என்றும் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் ஆப்செண்ட் ஆனதற்கான காரணம் குறித்து ஆராயப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாநில அளவிலான சிலம்பப் போட்டியைசென்னை புதுக்கல்லூரியில் துவக்கி வைத்த அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதையும் படிங்க:
சென்னையில் 9, 13 ஆகிய இரண்டு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அப்போது அவர், அரசு பணிகளில் விளையாட்டு துறையில் சிலம்பம் போட்டிக்கு 3% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் வழங்கியுள்ளார். பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழு அமைத்துள்ளார்.
4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி, சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டி என பல திட்டங்களை விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்திட முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அரசு பள்ளிகளில் வயது கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் விரைவில் சுற்றறிக்கை வெளியாகும். மாணவர்கள் முக கவசம் அணிவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் சிறப்பாக விளையாடி திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
தொடர்ந்து பேசிய அவர், 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம். மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.