முகப்பு /செய்தி /சென்னை / ரூ.200க்கு பதிலாக ரூ.500.. அள்ளிக்கொடுத்த ஏடிஎம்.. சென்னையில் சம்பவம்!

ரூ.200க்கு பதிலாக ரூ.500.. அள்ளிக்கொடுத்த ஏடிஎம்.. சென்னையில் சம்பவம்!

ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்.

ஏடிஎம்மில் 200 ரூபாய்க்கு பதில் வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்.

ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய ட்ரேவில் 500 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ஊழியர்கள் வைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அடுத்த அம்பத்தூரில் பழைய சிடிஎச் சாலையில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. அதில் உள்ள இயந்திரத்தில் பாலசுப்பிரமணி என்பவர், தனது வங்கிக்கணக்கில் இருந்து 8,000 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவர் கோரியதை விட 12,000 ரூபாய் கூடுதலாக 20,000 ரூபாயை ஏடிஎம் இயந்திரம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதே போல், திருமுல்லை வாயிலைச் சேர்ந்த சந்திரசேகர், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், 8 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என கட்டளை வந்துள்ளது. அதன்படி 8 ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கூடுதல் பணம் வந்துள்ளதாகவும் அதில் 6 பேர் வங்கிக்கு நேரில் வந்து பணத்தை திருப்பி கொடுத்ததாகவும் இந்தியன் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள், ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய ட்ரேவில் 500 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ஊழியர்கள் வைத்துவிட்டதாகவும் அதனால்தான் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். பராமரிப்பு குழுவினர் உடனடியாக நேரில் சென்று கோளாறை சரி செய்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் போது பணம் பறிபோகும் வகையிலான கோளாறுகளையே அதிகம் கேட்டும் பார்த்தும் உள்ள நிலையில், கூடுதலானபணத்தை ஏடிஎம் இயந்திரம் அள்ளி வழங்கிய சம்பவம் சுற்றுவட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : கன்னியப்பன்

First published:

Tags: ATM, ATM services, Chennai