முகப்பு /செய்தி /சென்னை / சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

வழக்கறிஞர்களாக இருந்துவந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி , அக்டோபர் 20ஆம் தேதி எஸ். ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28ஆம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிளாக பதவிவகித்துவரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 5 கூடுதல் நீதிபதிகளுக்கும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

First published:

Tags: Chennai, Chennai High court, Judge, Madras High court