Home /News /chennai /

சென்னையில் இன்றைய மின்தடை பகுதிகள்!

சென்னையில் இன்றைய மின்தடை பகுதிகள்!

சென்னையில் இன்று மின் தடை

சென்னையில் இன்று மின் தடை

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 17.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் : 

கீழ்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், ஓசன்குளம், தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி,. நேரு பூங்காவிலும், திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டிவாக்கம் ராமலிங்க நகர், இளங்கோ நகர், ஓ.எம்.ஆர். ஐஸ்வரியா மருத்துவமனையிலும், பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளான மாங்காடு குன்றத்தூர் ரோடு, எம்.ஜி.அர்.நகர் பூஞ்சோலை வீதி, காமராஜ் நகர், பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, கங்கா சாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.
Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Chennai power cut, Power cut

அடுத்த செய்தி