Home /News /chennai /

Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (23-08-22) மின்தடை!

Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (23-08-22) மின்தடை!

மின்தடை பகுதிகள்

மின்தடை பகுதிகள்

Chennai Power Cut | பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் நாளை (23.08.2022  - புதன்) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னையின் முக்கிய இடங்களான அண்ணாசாலை, பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ஜார்ஜ் டவுன் (கிழக்கு) பகுதி: தம்புசெட்டி தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, மண்ணடி தெரு, சவரிமுத்து தெரு, நைனியப்பன் தெரு, சாலை விநாயகர் தெரு, பிராட்வே, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆதம் தெரு, சின்ன தம்பி தெரு, ஆண்டர்சன் தெரு, டேவிட்சன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும்.

    பெரம்பூர் பகுதி : செம்பியம் காந்தி நகர் ஜி.என்.டி ரோடு, சந்திர பிரபு காலனி, லட்சுமி அம்மன் கோயில், செம்யிபம் பகுதி, கொடுங்கையூர் பகுதி, முத்தமிழ் நகர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டு இருக்கும்
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Chennai, Powercut, TANGEDCO

    அடுத்த செய்தி