ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளி : சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக சென்னையில் 5 சிறப்பு பஸ் நிலையங்கள் - எங்கிருந்து எங்கே... முழு விபரம் இதோ..!

தீபாவளி : சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக சென்னையில் 5 சிறப்பு பஸ் நிலையங்கள் - எங்கிருந்து எங்கே... முழு விபரம் இதோ..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Chennai | சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

  இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  செங்குன்றம் வழியாக கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

  ஈசிஆர் வழியாக புதுச்சேரி , கடலூர் மற்றும் சிதம்பரம் மார்க்கமாக செல்பவர்களுக்கு கே.கே.நகரில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் புறப்படும்.

  திண்டிவனம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

  ' isDesktop="true" id="822462" youtubeid="J4oY2AZIU5w" category="chennai">

  திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் செல்பவர்கள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகளும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகளும் பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

  Also see... தீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் எங்கிருந்து எல்லாம் இயக்கப்படுகிறது? முழு விவரம்

  இவற்றை தவிர, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

  இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

  மேலும், கார் உள்ளிட்ட இதர வாகனங்களில் செல்லும் மக்கள் திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bus, Chennai, Diwali festival