Home /News /chennai /

பல்லாவரத்தில் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் மரணம்

பல்லாவரத்தில் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் மரணம்

சிறுவன் உயிரிழப்பு

சிறுவன் உயிரிழப்பு

Chennai | பல்லாவரம் அருகே குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் 30-வது தெருவில் வசித்து வருபவர் டில்லிராஜ்(வயது-39). இவர் கால் டாக்சி ஓட்டுநர். இவரது இரண்டாவது குழந்தையான நான்கு வயது கௌதம் கிருஷ்ணா (UKG) படித்து வருகின்றார்.

    நேற்று சிறுவன் கௌதம் கிருஷ்ணா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது மேய்ச்சலில் இருந்த குதிரை கௌதம் கிருஷ்ணா மார்பில் எட்டி உதைத்ததில் வலியால் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கௌதமின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக கௌதம் கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Also see... தாய் யானையை பிரிந்த குட்டி 3 நாட்களுக்கு பிறகு தாயுடன் சேர்த்துவைப்பு

    தகவலின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சுரேஷ், விமானநிலையம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Child, Crime News, Dead, Horse race

    அடுத்த செய்தி