8ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு குரூப் ஸ்டடிக்காக வந்த சக மாணவர்கள் பாலியல் தொல்லை.. 4 மாணவர்கள் கைது
8ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு குரூப் ஸ்டடிக்காக வந்த சக மாணவர்கள் பாலியல் தொல்லை.. 4 மாணவர்கள் கைது
பாலியல் தொல்லை
Crime News | எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவியை அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயதான நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 8ம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு குரூப் ஸ்டடிக்காக வந்த சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவியை அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயதான நான்கு மாணவர்கள் சிறுமியின் வீட்டில் ஒன்றாக சேர்ந்து படிப்பதற்காக வந்த பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் 13 வயதாகும் எட்டாவது படிக்கும் நான்கு சிறுவர்களையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
இதனிடையே ராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு காதல் ஆசை காட்டிய அஜித் அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதில், மாணவி கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 வயதுடைய மாணவிக்கு அழகான பெண் குழந்தை நேற்று பிறந்தது. இதனை அறிந்த அஜித் கொல்லிமலை பகுதியில் தலைமறைவாகிவிட்டார் இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.