ஹோம் /நியூஸ் /சென்னை /

சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு... சமரசம் செய்ய வந்தவர் கொலையான சோகம்

சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு... சமரசம் செய்ய வந்தவர் கொலையான சோகம்

4 பேர் கைது

4 பேர் கைது

Chennai | வண்டலூர் அருகே சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சமரசம் செய்ய வந்தவர் படுகொலையானார். இதில் கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் சிவன் கோயில் விளையாட்டு மைதானம் அருகே ஏரிக்கரையில் இருதரப்பு மோதலில் 21-வயதான தேவா என்ற இளைஞர் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை பிடிக்க தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் கீரப்பாக்கம் கிரஷர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் தடுத்து நிறுத்திய போது நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளனர். உடனே தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச் சென்று நான்கு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

  போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நல்லம்பாக்கம் தேவாவை கொலை செய்த மேலக்கோட்டையூரை சேர்ந்த சுதர்சன்(எ)சுனில்(22), நெடுங்குன்றத்தை சேர்ந்த ரத்தினம்(22), இசக்கிவேல்(19), கண்டிகையை சேர்ந்த ராஜேந்திரன்(19) என்பது தெரியவந்தது.

  கண்டிகையை சேர்ந்த 16வயது சிறுவருக்கும், நல்லம்பாக்கத்தை சேர்ந்த சிறுவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மஞ்சள் நீராட்டு விழாவில் ஏற்பட்ட வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சமாதானம் செய்ய திங்கட்கிழமை மாலை இருதரப்பும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவாவை ஓட ஓட விரட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  மேலும் அவர்களிடமிருந்து 2 கத்திகளை பறிமுதல் செய்த தாழம்பூர் போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Also see... ஜவ்வாது மலை புத்தூர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற இளைஞர் மரணம்

  மஞ்சள் நீராட்டு விழாவில் 16-வயது சிறுவனை மற்றொரு சிறுவன் முறைத்து பார்த்ததாக ஏற்பட்ட தகராறில் சமரசம் செய்ய சென்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime News, Murder