ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

மாதிரி படம்

மாதிரி படம்

Deepavali | தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக ஏராளமானோர் புறப்பட்டுச் செல்கின்றனர்.

  இதனால், பஸ், ரயில்களில் கூட்டம் அலை மோதியது. இதேபோல் ஜவுளி, பட்டாசு, பலகார விற்பனையும் களைகட்டியது. சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவை, வேலூர், பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.

  இதையும் படிங்க : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... திணறும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை...

  இவர்களில் பலர் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாணவர்கள் சென்னையில் தங்கி தங்கள் மேல்படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர்.

  இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

  அந்த வகையில், தீபாவளியையொட்டி நேற்றும், நேற்று முன்தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதற்காக நேற்றும், நேற்று முன்தினமும் பயணிகள் வசதிக்காக 7 ஆயிரத்து 208 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இதில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 440 பேர் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க : ’ஒரு நாளில் ஒன்றும் ஆகாது, தாராளமா பட்டாசு வெடிங்க..’ - அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

  இதனிடையே, இன்று பகலில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஆனாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் மாதவரம் ஆகிய சிறப்பு பேருந்து நிலையங்களிலும் குறைந்த அளவு பயணிகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Deepavali