ஹோம் /நியூஸ் /சென்னை /

இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து... சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்..!

இன்று ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து... சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இன்று போதிய பயணிகள் இல்லாமல், சென்னை - மதுரை - சென்னை மற்றும் சென்னை - கர்னூல் - சென்னை இடையே, இயக்கப்படும் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று பகல் 1:10 மணிக்கு புறப்பட்டு, ஆந்திர மாநிலம் கர்னூல் விமான நிலையத்திற்கு பிற்பகல் 2:25 மணிக்கு, செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைபோல் இன்று மாலை 5:10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் ஆந்திர மாநிலம் கர்னூல் கர்னூலில் இன்று மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:20 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைப்போல் இன்று இரவு 7 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்டு, இரவு 8:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Airport, Chennai