Home /News /chennai /

கல்லூரி விரிவாகத்திற்கு ரூ.200 கோடி பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

கல்லூரி விரிவாகத்திற்கு ரூ.200 கோடி பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த 4 பேர் கைது

கல்லூரி விரிவாக்கத்திற்காக ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.5.46 கோடி தர வேண்டும் எனக் கூறி  மோசடி செய்த நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த B.M.ரெட்டி (எ)  லயன் முத்துவேல் என்பவர் தன்னை பெரிய பைனான்சியர் போல காட்டிக் கொண்டு தனது கூட்டாளிகள் மற்றும் தரகர்கள் மூலம் மதுரையில் உள்ள சேது பொறியியல் கல்லூரி நடத்தி வரும் முகமது ஜலீல் என்பவரிடம் அவரது கல்லூரி விரிவாக்கத்திற்காக ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.5.46 கோடி தர வேண்டும் எனக் கூறி  பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டு கடன் வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திரும்ப தராமலும் B.M.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றியது தொடர்பாக, கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவில் (EDF) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் மேற்பார்வையிலான குழுவினர்  தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு,மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த BM.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணா, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சங்கர், இசக்கியேல் ராஜன், சுதா ஆகிய 4 பேரை கைது செய்தனர் போலீசார் விசாரணையில்  B.M.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணா மீது மத்திய குற்றப்பிரிவு, சென்னையில் உள்ள காவல் நிலையங்கள் என 10க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் சுமார் ரூ.15, கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையும் வாசிக்க: வாகனம் ஓட்டுவதற்கே, பறப்பதற்கு அல்ல... சென்னை போக்குவரத்து போலீசார் அசத்தல் அட்வைஸ்

இவர் ஏற்கனவே 2019ம் ஆண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதால், ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரையின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் B.M.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணாவை குண்டர்  தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவல் குழுவினர் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு முத்துகிருஷ்ணா மற்றும் அவரது பினாமிகள் பெயரில் வாங்கி வைத்துள்ள 120 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டும். 15 அசையா சொத்துக்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் பதிமூன்று வங்கி கணக்குகளை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் அரசர்கள் அடைத்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: Chennai, Crime News

அடுத்த செய்தி