Home /News /chennai /

”சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல” - 383 ஆவது சென்னை தினம்

”சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல” - 383 ஆவது சென்னை தினம்

383 சென்னை தினம்

383 சென்னை தினம்

Chennai Day | சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் .22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கோலாகலமாக தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வருவோர் முதல்,   இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருவோரையும், கல்விக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோரையும் சென்னை மாநகரம் அரவணைக்கிறது. எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதேயில்லை. சென்னைக்குள் வந்து செல்லும் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பல நினைவுகளையும் சிலர் வாழ்க்கைக்கான பாதையையும் எடுத்து சென்றுக் கொண்டிருப்பர்.

    சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தின கொண்டாட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    Read More : தமிழ் தகுத்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்- ஆசிரியர் தேர்வு வாரியம்


    தமிழ் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்படுகின்றன. விளையாட்டு போட்டிகளுடன் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.வண்ண விளக்குகள், கேளிக்கை, விளையாட்டுகள் என அந்த பகுதியே திருவிழாக் கோலம் பூண்டதுமாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனை கடைகளும் அமைக்கப்பட உள்ளன. உணவுத் திடல்கள் மட்டுமின்றி கைவினைப் பொருட்கள். அலங்கார பொருட்கள் விற்கும் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் 'செல்ஃபி பூத்கள்' அமைக்கப்பட்டுள்ளன.சென்னை தினத்தை உற்சாகமாக கொண்டாடும் வகையில் பிரத்யேக பாடலும் இயற்றப்பட்டுள்ளது.

    சென்னையின் ஒவ்வொரு மூலையும் யாரோ ஒருவரை தேற்றி, ஆசுவாசப்படுத்தி வாழ்கைக்கான வழிகளை கொடுத்துக்கொண்டே தான் இருக்கும். இப்படி எந்த பேதமும் இன்றி வாழ்கை, வேலை, குடும்பம், தனக்கென ஒரு அடையாளம் என ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் சென்னையை கொண்டாடி தீர்ப்பதில் தவறில்லை.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Chennai day, Tamil Nadu

    அடுத்த செய்தி