Home /News /chennai /

மின்சார ரயில் மூலம் ரேசன் அரிசி கடத்தல்.. ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3டன் அரிசி பறிமுதல்

மின்சார ரயில் மூலம் ரேசன் அரிசி கடத்தல்.. ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3டன் அரிசி பறிமுதல்

ரயில் மூலம் கடத்திய 3டன் ரேசன் அரிசி பறிமுதல்

ரயில் மூலம் கடத்திய 3டன் ரேசன் அரிசி பறிமுதல்

Tiruvottiyur | தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு ரயில் மூலம் கடத்திய 3டன் ரேசன் அரிசியை கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை போலிசார் பறிமுதல் செய்தனர். இரண்டு நாட்களாக தொடர்ந்த இந்த வேட்டை இனியும் தொடருமென துணை கண்காணிப்பாளர்  முத்துகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாட்டிலிருந்து ரேசன் அரிசியானது ரயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வந்ததன் பேரில் தமிழ் நாடு காவல் துறை இயக்குநர் ஆணைப்படி இருப்புப்பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திரா செல்லும் மின்சார இரயில்களில் ஆய்வு மேற்கொண்டதில் கடந்த இரண்டு நாட்களில் ரேசன் அரிசி அடங்கிய 116 மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. இது  சுமார் 3000 கிலோ எடையை கொண்டிருந்தது.

    இந்த ரேசன் அரிசி மூட்டைகள் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலும் அரிசியை கடத்துபவர்கள் பயணிகளுடன் பயணிகளாக பயணித்ததாலும் போலீசாரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. என  இருப்பு பாதை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    Also see...மூணாறில் நள்ளிரவில் நிலச்சரிவு.. கடைகள் வாகனங்கள் நிலத்தில் புதைந்தது

    மேலும் இந்த இரண்டு நாள் நடந்த  வேட்டை  இனி வரும் நாட்களிலும் தொடரும் என அதிகாரி முத்துகுமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: அசோக்குமார், திருவெற்றியூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Free Rice, Ration Goods, Thiruvotriyur

    அடுத்த செய்தி