Home /News /chennai /

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய பெயிண்டர்கள்.. ரூ.10 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆனவர்கள் கைது

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய பெயிண்டர்கள்.. ரூ.10 லட்சம் பணத்துடன் எஸ்கேப் ஆனவர்கள் கைது

3 பேர் கைது

3 பேர் கைது

Chennai | ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூபாய் 10 லட்சத்தை திருடிய பெயிண்ட் வேலைக்கு வந்தவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை 2வது பிரதான சாலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு கல்பாக்கம் சதுரங்கபட்டினத்தை சேர்ந்த 62-வயதான சுந்தர், கானத்தூர் 52-வயதான மார்ட்டின், 50-வயதான பாபு(எ) பழனிவேல் ஆகியோர் பெயிண்ட் வேலை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில்  சத்தியமூர்த்தி வீட்டில் வைத்திருந்த ரூபாய் 10 லட்சம் பணம் மாயமாகியதாகவும், பெயிண்ட் வேலை செய்து வந்தவர்கள் திடீரென சொல்லாமல் வேலையை விட்டுவிட்டு சென்றுள்ளதால் பெயிண்டர்கள் மீது சந்தேகமாக இருப்பதாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையில் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.  பெயிண்ட் வேலையில் ஈடுபட்டு வந்தவர்களை தேடிவந்த நிலையில் சுந்தர், மார்ட்டின், பாபு(எ) பழனிவேல் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான பெயிண்டர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பெயிண்ட் வேலை செய்து வந்த சுந்தர் வீட்டில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் பணத்தை திருடியதை அவர்கள் ஒப்புகொண்டனர்.

    மேலும் திருடிய 10 லட்சம் பணத்துடன் கானத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.
    பின்னர், அந்த பணத்தை மூன்று பேரும் பங்கு பிரித்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்று தெரிந்தும் வயதானவர் தனியாக வசித்து வந்ததை அறிந்து கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தோடு வீட்டில் இருந்த ரூபாய் 10 லட்சத்தை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    Also see... பொங்கல்... கிச்சடி... காலை சிற்றுண்டியில் இடம்பெறும் உணவுகள் என்னென்ன?

    அதில் மார்ட்டின் மற்றும் பாபு(எ) பழனிவேல் ஆகிய இருவரிடமிருந்து ரூபாய் 7 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கப் பணத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    சுந்தர், மார்ட்டின், பாபு(எ) பழனிவேல் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலமுருகனை போலீசார் தேடிவருகின்றனர்.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்,இசிஆர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Crime News, Theft

    அடுத்த செய்தி