முகப்பு /செய்தி /சென்னை / கருணாநிதி பேனா சிலை: கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆதரவு!

கருணாநிதி பேனா சிலை: கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆதரவு!

கருணாநிதி பேனா சிலை

கருணாநிதி பேனா சிலை

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வங்க கடலில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில், பேனா சின்னம் அமைக்க ஆதரவாக 22 பேரும் எதிராக 12 பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துத்துறை சேவையை போற்றும் வகையில், நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்கான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீனவர்கள், வணிகர் சங்கம், நாம் தமிழர் கட்சி, பாஜக, மே 17 இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், ஆம் ஆத்மி, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.]

அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைத்தால் உடைப்பேன் என சீமான் பேசியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK Karunanidhi, Karunanidhi statue, Tamilnadu government